பாஜகாவுக்கு படம்போட்டு காட்டிய விஜய்!

தமிழகம் நெய்வேலியில்  மாஸ்டர் படப் பிடிப்பு நடைபெற்றுவரும் பகுதிக்கு விஜய் ரசிகர்கள் வந்து குவிந்துள்ள நிலையில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட படம் ஒன்றினை  நெய்வேலிக்கு நன்றி என தெரிவித்து தனது கீச்சு பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய்.

அண்மையில் வருமான வரித் திணைக்களத்தினால் படப்பிடிப்பில் இருந்து இடைநிறுத்தி விஜையினை அழைத்துச்சென்று இரண்டு நாட்களாக விசாரணை நடத்திய சர்ச்சையில் அரசியல் பின்புலம் இருப்பதாக சினிமா தரப்பினர் , அரசியல் தலைவர்கள் , பத்திரிகையாளர்கள் கூறிவந்த நிலையில்  , அதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்துக்கு முன்னால் இந்து அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இருந்தனர் , இந்நிலையில் விஜையினை பார்ப்பதற்கு ரசிகர்கள் அப்பகுதியில் கூடிவருவதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது , எனவே தனது ரசிகர்களுடன் எடுத்த படத்தை தனது கீச்சு பக்கத்தில் பகிர்ந்துள்ளதும் ஒருவகையில் தனது எதிர்ப்பாளர்களுக்கு பதில் கூருவதாகே அமைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

No comments