கல்வியின் முன்னேற்றம் உரிமை தரும்

கல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சி - பூநகரி முழங்காவில் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இன்று (10) திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

பொருளாதார ரீதியில் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு இந்த புதிய அரசு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில் பட்டதாரிகளுக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்புக்களை இந்த அரசு வழங்கவுள்ளது

இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம். அத்துடன் மக்களின் தேவைகளையும் இனங்கண்டு அதனையும் தீர்க்க இந்த அலுவலகங்கள் உதவியாக இருக்கும்.

யாழ். பல்கலைக்கழகத்திலும் கிளிநொச்சி வளாகத்திலும் இடம்பெற்ற சம்பவத்தினால் எமது கல்வி பின்னடைந்து செல்கின்றது. அடுத்த தலைமுறையினரை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்று எல்லோரும் பாடுபடுகின்றனர்.

ஆனால் தற்போது, பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது - என்றார்.

No comments