இராணுவ அதிகாரி உட்பட 21 பேருக்கும் மறியல்

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உயர் அதிகாரி அடங்கலான ஐந்து இராணுவ வீரர்கள் உட்பட 21 பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த 21 பேரும் இன்று (10) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments