நான்கு சீன இராணுவ வீரர்கள் மீது அமொிக்கா குற்றச்சாட்டு

அமொிக்காவின் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஈக்விஃபாக்ஸின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக நான்கு சீன இராணுவ அதிகாரிகள் மீது
அமொிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நடவடிக்கையினால் 2017 ஆம் ஆண்டில் 147 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சில இங்கிலாந்து மற்றும் கனேடிய வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீன இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை அறிவித்த அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் இது "வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த நான்கு பேரும் சீன இராணுவத்தின் ஒரு அங்கமான மக்கள் விடுதலை இராணுவத்தின் 54 வது ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது.

அமொிக்காவின் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஈக்விஃபாக்ஸின் மீது சைபர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பல வாரங்கள் கடுமையாக வேலை பார்த்து பாதுகாப்பு நெட்வொர்க்குகளை உடைத்து தனிப்பட்ட தரவுகளை திருடிச் சென்றனர் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தரவு தொகுப்பு மற்றும் தரவுத்தள வடிவமைப்புகள் உள்ளிட்ட வர்த்தக ரகசியங்களை குழு திருடியதாக இவர்கள் மீது ஒன்பது எண்ணிக்கையிலான குற்றச்சாட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நான்கு சந்தேக நபர்களும் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் அமெரிக்காவில் விசாரணைக்காக கொண்டுவந்து நிறுத்துவது சாத்தியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் குறித்த நான்கு சீன இராணுவ வீரர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. அத்துடன் நீதிமன்றத்தில் விசாரணைகளை நடத்தி அவர்களை சிறைக்குள் அடைக்கவும் முடியாது என எஃப்.பி.ஐ துணை இயக்குனர் டேவிட் போடிச் கூறியுள்ளார்.

No comments