பாலியல் வதையை எதிர்த்து பெண்கள் அமைப்பு போராட்டம்

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் கைபேசி மூல பாலியல் சேட்டைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (10) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாலியல் வன்முறை மற்றும் பகிடி வதைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது “மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே, தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா, மனிதரை மனிதர் மனிதப்பண்பு தான, நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம், பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம்" போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.No comments