இளைஞர்களை கடத்துவது தேசியக்கடமையாம்?

தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றமை தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என புகார் அளித்துள்ளனர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்க. அரசியல் பழிவாங்கல தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவால் முதலாவதாக 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சாட்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணைக்குழுவால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம், அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் இருவர் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினர். எவ்வாறாயினும், முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்று ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

 அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானதுடன் இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments