நினைத்ததை ஐநாவில் முடித்தார் கோத்தா!

அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

மேலும்,

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் அரசியலமைப்பு கட்டமைப்புக்கு உள் செயல்படுத்தப்பட முடியாது, மக்களின் இறையாண்மையை மீறியுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அனுசாரணை வழங்க மைத்திரிபால சிறிசேனவின் கடந்த அரசு அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவில்லை, நாடாளுமன்றத்தில் குறிப்பும் இல்லை - என்று அமைச்சர் ஐநாவில் தெரிவித்தார்.

No comments