இராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (26) ஆரம்பமானது.

காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு இடம்பெறுவதுடன் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆர்வத்துடன் குறித்த நேர்முகத்தேர்விற்கு  வருகை தந்திருந்தனர்.

இதன் போது பிரதேச செயலகத்தில் இராணுவத்தினர் வருகை தந்துள்ளதுடன் நேர்முக தேர்விலும் பங்கேற்றிருந்தனர்.

இவ் வேலைவாய்ப்பிற்கான  நேர்முக தேர்வினை சீராக மேற்கொள்வதற்கு   நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இன்று மாத்திரம் 300க்கும் அதிகமான விண்ணப்பத்தாரிகள் நேர்முக தேர்வில் பங்கேற்கவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments