அராஜகம் புரிந்த வாள் வெட்டுக்கும்பல்

தென்மராட்சி - கொடிகாமம், மாசேரியில் இன்று (26) அதிகாலை வீடு ஒன்றுக்குள் வாள், கோடரி மற்றும் கொட்டன்களுடன் புகுந்த குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதன்போது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்தி கோடரியால் கொத்தி நாசம் செய்யப்பட்டதுடன், வீட்டின் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

பட்டா ரக வாகனத்தில் வந்திருந்த 15 பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டது. சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

No comments