வெஸ்ட்மினிஸ்டரில் நரி புகுந்ததால் பரபரப்பு!

பிரித்தானியப் நாடாளுமன்றமான வெஸ்மினிஸ்டருக்குள் நரி புகுந்ததால் வளாகம் முழுவமு் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை
போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டிடத்திற்குள் புகுந்துள்ளது. தானியங்கிப் படியான எஸ்கலேற்றரில் ஏறிய நரி நான்காவது மாடிக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் பிரதான கட்டிடத்திற்குள் நுழைந்தது.

இதையறிந்த காவல்துறையினர் நரியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நரியோ அங்குமிக்கும் ஓடி காவல்துறையினரை அலைக்கழித்தது. பின்னர் களைப்படைந்த நரி காவல்துறையினரிடம் பிடிபட்டது.

பிடிபட்ட நரியை பெட்டி ஒன்றினுள் எடுத்துச் சென்ற காவல்துறையினர் காட்டுப் பகுதி ஒன்றினுள் விடுவித்துள்ளனர்.

No comments