ஞாயிறு முதலமைச்சர் கூட்டு: கூட்டமைப்பிற்கு பிரகாசம்?


எதிர்வரும் ஞாயிற்றுக்கிமை முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில் ஊடக வெளிச்சம் அதனை நோக்கி திரும்பியுள்ளது.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி அரசாங்கத்திற்கு சிம்ம சொர்ப்பனமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அரசாங்க அதிபர்களை மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும், தேர்தலினை இலக்காக கொண்டே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments