பாலியல் பகிடி வதை:யாழ்.பல்கலை முன் ஆர்ப்பாட்டம்?


மாணவிகள் மீதான பாலியல் பகிடிவதை விவகாரம் மற்றும்  பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை , பாலியல் வதைகளுக்கு எதிராக நாளைய தினம் கண்டனப் போராட்டம் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகளிர் அமைப்புக்கள் சிலவே ஒன்றிணைந்து நாளைய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன..

இதனிடையே யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

எனக்குக் கிடைத்த அறிக்கையின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினரை நான் சந்திக்க இருக்கின்றேன். அத்தோடு அந்த மாணவர்களுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.

பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments