முல்லையில் வெடிமருந்து கடத்தல்:இருவர் கைது?


மீன்பிடி நடவடிக்கைகளிற்கென சட்டவிரோதமாக வெடிபொருட்களை சேகரித்தமை தொடர்பில் முல்லைதீவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது குடும்பஸ்தர் ஒருவர் காயடைந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

;சம்பவத்தினை தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான காயமடைந்தவரின் தாயார் மற்றும் சகோதரன் காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் நேற்று முல்லைதீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் எறிகணை ஒன்றினை பிரித்து அதில் இருந்து வெடிமருந்து எடுக்க முற்பட்ட போது எறிகணை வெடித்தில் 48 வயதுடைய சூசைப்பிள்ளை புலலேந்திரன் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து சிலாவத்தை வீட்டிலிருந்து மேலும் சில வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பூட்டி இருந்த குறித்த வீட்டை சோதனை செய்த நிலையில் மேலும்; வெடிமருந்து பொருட்கள் வீட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெடிமருத்து கடத்தலுடன் தொடர்புடைய காயமடைந்த குற்றவாளியினை மருத்துவமனை சிகிச்சையின் பின்னர் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments