சங்கரி குழப்பம்: பிசுபிசுக்கிறது சுரேஸ் கூட்டு?


ஆனந்த சங்கரியின் மறுப்பினால் முன்னாள் முதலமைச்சர் கூட்டு கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஈபிஆர்எல்எவ் கட்சியை தமிழர் ஐக்கிய முன்னணி எனப் பெயர் மாற்றுவதில் தனக்கு உடன்பாடு கிடையாது என ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியாவிற்கு எழுத்தில் அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் கட்சியின் பெயரை தமிழிலும் சிங்களத்திலும் உச்சரிக்கும்போது எந்த மாறுபாடும் காணாதபோதும் ஆங்கிலத்தில் உச்சரித்து அதனை குறுக்கி உச்சரிக்கும்போது ரியூஎவ் என்றே உச்சரிக்கும் தன்மை காணப்படுகின்றது.

இவ்வாறு ரி.யூ.எவ் என்ற உச்சரிப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்ப பெயரின் உச்சரிப்பாக காணப்படுவதனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எழுத்தில் கடிதம் அனுப்பப்பட்டு ஏதும் ஆட்சேபனை இருந்தால்; சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.

இதனால் குறித்த பெயர் சுரேஸ் பிரேமச்சந்திரனிற்கு கிடைப்பது ஆனந்தசங்கரியின் கையில் இருந்த நிலையிலேயே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்..

No comments