கூட்டமைப்பினை கண்டுகொள்ளாத கோத்தா அரசு!


வடக்கில் 3 மாவட்டங்களில் நிலவும் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் பிர ச்சினைகள் தொடா்பான கூட்டத்திற்கு திட்டமிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்திவு, மன்னாா், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மேற்படி இரு திணைக்களங்களினதும் பிரச்சினை கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அழைக்கப்படவில்லை. இது குறி த்து நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசாவிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதன்போதே அவா் மேற்கண்டவாறு கூட்டமைப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில்,
குறித்த கலந்துரையாடலில் திணைக்களங்களின் அமைச்சர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன்
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் திணைக்களங்களின் பிடியில் உள்ள நிலங்களின் விபரம் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இவ்வாறு ஆராயப்பட்ட கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் ஆராயப்பட்டவேளையில் மிகப்பெரும் அநியாயம் ஒன்றை ஏற்படுத்தியே ஆராயப்பட்டது.
அதாவது முல்லைத்தீவில் சகல நிதி ஒதுக்கீடுகளிற்கும், கிடைக்கும் வளங்களை பங்கிடுவதற்கும் 6 பிரதேச செயலாளர் பிரிவு உள்ளது எனக் கான்பிக்கும் அரசு இந்த விபரத்திற்கு மட்டும்
5 பிரதேச செயலாளர் பிரிவுகளை காண்பித்தே விபரத்தை சமர்ப்பித்துள்ளனர். அதாவது 6 வது பிரதேச செயலகம் எனக் கூறப்படும் வெலிஓயா எனப்படும் எமது இதய பூமியான மணலாறு தொடர்பில் எந்த தகவலையும் வெளிப்படுத்தவே இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதோடு அது ஆவண ரீதியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மறைக்கப்பட்ட வெலிஓயா என தற்போது நிர்வகிக்கப்படும்
பிரதேச செயலாளர் பிரிவானது 116 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. 116 ச.கிலோமீற்றர் என்றால் 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பாகும். அந்த 70 ஆயிரம் ஏக்கர் நிலமும் தமிழர்களின் பூர்வீக நிலமாகும்.
அதனை படிப்படியாக அபகரித்து குடியேற்றம் என்னும் பெயரில் அபகரித்து வைத்துள்ளமை வெளியே தெரிந்துவிடும் என்பதற்காகவே அப்பகுதியின் விபரம் மறைக்கப்பட்டதாகவே கருதப்படுகின்றது என்றார்.

No comments