கூட்டமைப்பே வடகிழக்கு மக்களது பிரதிநிதிகள்?


தமிழ் மக்களிற்கான தீர்வுக்கான அழுத்தத்தை தமிழ்த் தேசிய  கூட்டமைப்பு கொடுக்க முடியாது என  அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன கூறியயிருக்கின்றார்.

அவருடைய இந்தக்  கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மாத்திரமல்ல ஐனநாயக ரீதியாக கண்டிக்கப்பட வேண்டுமெனவும் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு தமிழ் மக்கள் 2001 ஆண்டில் இருந்து 2020 இன்றுவரை தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான மக்கள் ஆணையை 90% தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் தீர்வு தொடர்பாக வலியுறுத்த வேண்டிய ஐனநாயகப்பலம் கூட்டமைப்பிற்கே உரியதாகும் அதனை அரசாங்கத்திடமோ அல்லது பூகோள நலன்சார்பு நாடுகளிடமோ ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளிடமோ வற்புறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு.

இவ்வாறான முன் நகர்வுகளை அரசாங்கம் விரும்பாவிட்டால் தாங்களே தமிழர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த ஒரு சுமூகமான அரசியல் அதிகாரப் பகிர்வை வடகிழக்கு தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும்

இதனை செய்யாது ஐனநாயக ரீதியாக வடகிழக்கில் வாழும் தேசிய இனமான தமிழர்கள் தமது தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆணையை கொச்சைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வடகிழக்கு தமிழர்களின் குரலாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பே அங்கிகாரம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.
.

No comments