சொன்னதை செய்வதே எம் கொள்கை - ஆறுமுகன்

சமூகத்துக்காக வேலை செய்யும் கட்சியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகும். அதாவது சொல்வதை செய்து காட்டுவதே எங்களது கொள்கையாகும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

பொகவந்தலாவயில் நடைபெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

இந்த தோட்டத்தில் 212 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கான தனி வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக 100 வீடுகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 112 வீடுகள் அமைக்கப்படும். அப்போது வீடில்லா பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரும்.

காங்கிரஸ் என்பது சமூகத்துக்காகவே வேலை செய்யும் கட்சியாகும். எனவே எந்த கட்சியில் அங்கம் வகித்தாலும் உங்களுக்கு வந்து சேரவேண்டியவை நிச்சயம் வரும். அவற்றை நாம் பெற்றுக்கொடுப்போம்.

தோட்ட அதிகாரிகளாக கடமையாற்றுபவர்களும், தோட்டத்தில் பிறந்து எந்ததொழியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் வீட்டுத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

ஏனெனில் மலையகத்தில் லயத்து வாழ்க்கைக்கு முழுமையாக முடிவு கட்ட வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நாமும் அதனையே விரும்புகின்றோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதையும் உறுதியாக கூறிக்கொள்கின்றேன் - என்றார்.

No comments