முன்னாள் ஆளுநர் வடக்கில் பிசி?


முன்னைய மைத்திரி அரசில் அடிக்கல் நாட்டப்பட்ட தி;டங்கள் பலவற்றினதும் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கின்ற நிலையில் அவற்றினை நடத்திக்காட்ட முன்னாள் வடக்கு ஆளுநர் ஆர்வம் காட்டிவருகின்றார்.
இதன் ஒரு கட்டமாக வடமராட்சி  மீனவர் சங்கங்களின் சமாச பிரதிநிதிகளை கலாநிதி.சுரேன் ராகவன் அவர்கள் இன்று (23) முற்பகல் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகப் பகுதியில் சந்தித்தார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட பருத்தித்துறை மீன்பிடி துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அப்பகுதி மக்களுக்கு காணப்படும் நிலைப்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

No comments