புறக்கணிக்க டெலோவின் சகல பிரிவுகளும் அழைப்பு?


சுதந்திரதின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் இசைப்படுமென்ற அரசின் அறிவிப்பு தமிழர்களையும், தமிழை தாய் மொழியாக கொண்ட எமது சகோதரர்களான முஸ்லிம் மக்களையும் உணர்வுபூர்வமாக காயப்படுத்துகிற ஒரு நடவடிக்கை. சுயமரியாதை கொண்ட தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் ஒரேயொரு விதத்தில் மட்டுமே எமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.  கொழும்பில் அரச ஏற்பாட்டில் நடக்கும் சுதந்திரதின கொண்டாட்டத்தை மட்டுமல்ல, ஏனைய மாகாணங்களிலும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படவிருக்கிற சகல சுதந்திரதின கொண்டாட்டங்களை புறக்கணிக்கும்படி மக்களை அழைக்கிறோம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா

No comments