மாவை இல்லாவிட்டால் நானே:சீ.வீ.கே!


வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவே பொருத்தமானவர். ஆனாலும் ஏதேனும் காரணங்களால் அவர் களமிறங்காதவிடத்து அடுத்த தெரிவு நானாகவே இருக்க வேண்டும். இதனை கட்சி செய்யாதவிடத்து அதற்கு எதிராக என்னுடைய செயற்பாடுகளை நான் முன்னெடுப்பேன் என சீ.வீ,கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 


 இப்பொழுது மாகாண சபையில் தான் என்னுடைய சேவை தேவை என்று நான் நினைக்கின்றேன். இனிமேல் வரக் கூடிய ஒரு சபை இதுவரையிலும் இருந்த சபையிலும் பார்க்க எந்த நிலையில் இருக்குமென்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஒரு திறமான சபையிலையே எங்களுடைய செயற்பாடுகள் திறமையாக அமையவில்லை என்பது என்னுடைய கவலை.

ஆகவே என்னுடைய சேவை உண்மையாக மாகாணத்திற்குத் தான் தேவை என்பது என்னுடைய கருத்து. மதீப்பீடுகளின் அடிப்படையில் எனக்குள் அந்தக் கருத்து இருக்க வேண்டும். ஆகவே அடுத்த ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமாக இருந்தால் நான் மாகாண சபையுடாக மக்களுக்குச் சேவையாற்றலாம். சேவையாற்ற வேண்டுமென்ற கருத்தின் அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தலைப் பற்றி நான் சிந்திப்பதில்லை.

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து பின்னர் தான் மாகாண சபைத் தேர்தல் நடக்கும். இப்ப இருக்கிற சூழ்நிலையில் மாவை சேனாதிராசா தான் தலைமைத்துவத்தோடு ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது ஆதரவோடு பொருத்தமானவராக இருப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியான நிலை உருவாகி மாவை சேனாதிராசா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை ஆதரித்துச் செயற்படுவது தான் என்னுடைய கருத்து. ஆனால் அவர் களமிறங்காவிட்டால் அந்த இடத்திற்கு மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை அந்த மாகாண நிர்வாகம் மாகாண ஏற்பாடுகள் சட்டங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கின்ற வகையில் எனக்குள் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை நிச்சயமாக நான் முன்வைப்பேன்.

 வெறுமனே கதிரையில் இருந்து கலாட்டும் இடம் அல்ல அது. பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டிற்கான இடம். அதிலும் நிர்வாகப் பதவிகளுக்கு வரக் கூடியவர்கள் சட்டம் தெரிந்தவர்கள் அனுபவம் உள்ளவர்கள் தொடர்பாடல் உள்ளவர்கள் இதற்கு வர வேண்டுமென்று நான் எதிர்பார்க்கின்றேன். ஆனால் தமிழரசுக் கட்சியாலோ அல்லது கூட்டமைப்பாலோ அவ்வாறான சூழ்நிலை இல்லையென்றால் அதற்கு இடமளித்துவிட்டு தனிப்பட்ட முறையில் என்னுடைய செயற்பாடுகள் அமையும் என்றார்.

No comments