கொரனோ கோத்தாவிற்கு கைகொடுத்தது?


இந்திய அழுத்தங்களையடுத்து சீனா பயணத்தை கோத்தபாய கைவிட கொரோனோ வைரஸ் கைகொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் சீனாவுக்கான பயணம் இரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
இம்மாதம் 2ம் வாரம் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்யவிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
சீனாவிற்கான ஜனாதிபதியின் விஜயமானது நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெரும்பாலும் ஒத்திவைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக  ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். அவ்வாறு இந்த விஜயம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில்,இது இரண்டாவது தடவையாக இடம்பெற்றுள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments