தெற்கு லண்டனில் கத்திக்குத்து! ஆயுததாரி சுட்டுக்கொலை!

தெற்கு லண்டன் பகுதியில் ஒருவர் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14
மணியளவில் ஸ்ரெதம் பிரதான வீதியில் (Streatham High Road) மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் செவிமடுத்ததப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மர்மநபர் ஒருவர் ஸ்ரெதம் பிரதான வீதியில் பயணித்தவர்கள் மீது கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவுவண்டிகளும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் மகிழுந்துகள் விரைந்தன.

பின்னர் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரால் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

No comments