கோரோனோ அச்சுறுத்தல் நடுவே, லாசா காச்சலினால் 41 பேர் பலி!

உலகளாவியரீதியில் கொரோனா வைரஸ் பயத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் நைஜீரியாவில் லாசா எனும் காய்ச்சல் பாதிப்பினால் 41 பேர் பலியாகியுள்ளதாக அந்நாடு சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் இந்த மாத தொடக்கத்தில் மிகவும் தொற்றுநோயான லாசா காய்ச்சல் ஆரம்பித்ததாகவும்  இதுவரை நாற்பத்தொரு பேர் இறந்துள்ளனர் என்று நைஜீரியா நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) கூறியுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்குள், இந்த நோய் மேற்கு ஆபிரிக்க நாட்டில் ஒன்பது முதல் 19 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஜனவரி 1 முதல் ஜனவரி 26 வரை மொத்தம் 258 சசம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் ஏழு சுகாதார ஊழியர்க்ளும் பாதிக்கப்பட்டுள்ளதகவும் நைஜீரியா நோய் கட்டுப்பாட்டு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. லாசா காய்ச்சல் என்பது வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலாகும், இது பலவீனம், தலைவலி, வாந்தி மற்றும் தசை வலிகள் அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

No comments