சிறீகாந்தாவுக்கு திருமலை:டெலோவுக்கு விட்டுக்கொடுப்பு?


யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் டெலோ வேட்பாளருக்கு இடம் விட்டு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறீகாந்தா எதிர்வரும்  தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட தீர்மானத்திலுள்ளாராம்.

எம்முடன் பயணிக்க விரும்பும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் எம்முடன் இணைய விரும்பினால் இணையலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

தனது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தவர்களுடன் உரையாடுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூட்டில் இணையலாமென எதிர்பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் சிவாஜிலிங்கத்திற்கும் தனக்கும் இடம் தரப்படவேண்டுமென முரண்டுபிடித்து வந்த சிறீகாந்தா தற்போது திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட தீர்மானத்திலுள்ளாராம்.

No comments