யாழில் சித்தார்த்தனுடன் கஜதீபனும்?


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புளொட் கட்சி சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ஆகிய இருவரும் போட்டிபோடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் புளொட் கட்சிக்கு இரு இ;;டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

ஆதில் ஏற்கனவே சித்தார்த்தன் போட்டியிடுவது நிச்சயமாகியிருந்த நிலையில் எஞ்சிய ஒன்றில் போட்டியிட ஜங்கரநேசன்,அனந்தி என பலரும் முண்டியடித்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய கட்சி கூட்டத்தில் புளொட் கட்சி சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ஆகிய இருவரும் போட்டிபோடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments