நேவிக்கும் ஆயரின் பரிசு?


மன்னாரில்  கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(7) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

ஜேர்மன் நாட்டின் உயர் மறைமாவட்டத்தின் நிதி உதவியுடன்,கறிற்றாஸ் செடேக் அமைப்பினூடாக குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தலைமையில் இடம் பெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம வருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 11 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.மன்னார் மறைமாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் வரகை தந்த விருந்தினர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.குறித்த வீடுகள் ஒவ்வென்றும் தலா 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அங்குள்ள மக்களது காணிகளை ஆக்கிரமித்துள்ள கடற்படைக்கு பரிசும் வழங்கப்பட்டது. 

No comments