ஆர்ப்பாட்ட ஸ்டேசனில் கோத்தா அளித்த வாக்கு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த டெங்கு ஒழிப்பு உதவியாளர்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடினார்.

ஒப்பந்த அடிப்படையிலான தமது நியமனத்தை கடந்த அரசு இடை நிறுத்தியதாக தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதி குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தார்.

இதன்போது ஒரு இலட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் தொழில் நியமனத்தைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார்.

No comments