வெடிபொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி-2 பகுதியில் கைது
செய்யப்பட்ட நபரிடம் இருந்து 45 ஜெலக்நைட் குச்சிகள், 33 அடி வயர் மற்றும் 69 டெட்டநேட்டர்க் மீட்கப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை 5 ஆலிம் வீதியில் வசிக்கும் நபரிடம் இருந்து ஜெலக்நைட் இரண்டும் ஒரு அ டிவயரும் மீட்கப்பட்டுள்ளது என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த இருவரிடம் இருந்து குறித்த வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

No comments