விக்கினேஸ்வரனின் கூட்டு ஞாயிறு?


வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  ஞாயிற்றுக்கிழமை கைச்சித்திடப்பட்டு கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்பட இருக்கின்றதாகத் தெரிய வருகின்றது. 

இந்த புரிந்தணரவு ஒப்பந்தங்கள் காலை 9.30 மணி முதல் 11.30 மணிக்கிடைப்பட்ட சுப நேரத்தில் கையொப்பமிடப்பட உள்ளதுடன் கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் மற்றும் கட்சிகள் அமைப்புக்கள் குறித்தான முழுமையான விபரங்களையும்  அறிவிக்கும் வகையில் ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் அரசியல் பரப்பில் கூட்டணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன. 

இந்தக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் பொது அமைப்புக்கள் எனப் பலரும் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறான நிலைமையில் அந்தக் கூட்டணி உருவாக்கம் முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் தைப்பூசத்தில் அக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு கூட்டணி தொடர்பான அறிவிப்புக்களும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments