தமிழ் பொலிஸ் கொலை - இருவர் மறியலில்; ஒருவர் முன்னாள் போராளி?

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.றிஸ்வான் இன்று (07) உத்தரவிட்டார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டைப் பிரதேசத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய தம்பாப்பிள்ளை சிவராசர் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், அவரின் பண்ணை வீட்டின் முன்னால் உள்ள வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டார்.

இதனையடுத்து மொஹமட் அஸ்மி மற்றும் முன்னாள் போராளியான ரமேஸ் என்று அழைக்கப்படும் குணசேகரன் சுரேந்திரன் ஆகியோரை பொலிஸார் அன்றைய தினமே கைது செய்தனர்.

No comments