பெருந்தோட்டங்கள் சீனாவுக்கு??

இந்த அரசு பெருந்தோட்டத்துறையை சீனாவிற்கு தாரைவார்க்க தயாராக உள்ளார்களா என்ற கேள்வி எழுகின்றது -மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இன்று (07) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

மஹிந்த ராஜபக்ச தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதல் 1000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களது சித்து விளையாட்டுக்களை நாம் மறந்துவிடக் கூடாது.

இவர்கள் ஆட்சிப்பீடம் ஏறியது முதல் நாட்டை விற்க மாட்டோம் என்று கூறினார்கள். இன்று நாட்டை விற்பவர்களாக மாறியுள்ளனர்.

ராஜபக்சக்களுக்கு சீனாவுக்கு நன்றி செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டின் பெருந்தொகையான காணிகள் பெருந்தோட்டத் துறையிலேயே இருக்கிறது. இத்துறையை 22 கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன. இந்த கம்பனிகளை அகற்றி பெருந்தோட்டத் துறையை சீனாவுக்கு தாரைவார்க்க தயாராகிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. - என்றார்.

No comments