மொட்டு மட்டுமே போட்டி?ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் பொது தேர்தலில் உறுதியாக மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுமா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி தற்போது எழுப்ப்படுகின்றது.

எமக்கு கூட்டணி அமைத்தும் தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியும் அல்லது தேர்தல் முடிந்தும் கூட்டணி அமைக்க முடியும். பொது தேர்தல் தொடர்பில் கட்சி தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடவுள்ளனர்.

இதில் எந்த தீர்மானம் எட்டப்பட்டாலும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments