தொடர்கின்றது புதையல் வேட்டை?


கிளிநொச்சியை அடுத்து கலகெட்டிஹேனபகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கலகெட்டிஹேன, வீரகுல, கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, பமுனுகம பிரதேசங்களை சேர்ந்த  34 தொடக்கம் 57 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தே நபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், சந்தே நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (10) முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments