ரணில் பழிவாங்கிய? நீதிபதியின் மனு நிராகரிப்பு

சட்டத்துக்கு புறம்பாக யானை ஒன்றை வைத்திருந்த குற்றம்சாட்டப்பட்டுள்ள தனக்கு எதிரான வழக்கிற்கு தடை கோரிய முன்னாள் மஜிஸ்திரேட் திலின கமகேயின் மேன் முறையீட்டை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) நிராகரித்துள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை முன்னாள் ஐதேக அமைச்சர் வசந்த சேனநாயக்க தாக்கல் செய்திருந்தார்.

"தான் நீதிபதியாக இருந்த போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்களின் படி செயற்பட மறுத்ததால் அரசியல் ரீதியாக தான் பழிவாங்கப்பட்டுள்ளேன்" என்று திலின கமகே குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments