பிரான்சில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பூப்பந்தாட்டப் போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த
போட்டிகளின் 2020 இற்கான போட்டிகள் ஆரம்பித்துள்ளது. கடந்த 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பப் போட்டியாக பூப்பந்தாட்டப்போட்டிகள் நியூலிசூர்மார்ன் பிரதேசத்தில் உள்ள விளையாட் மைதானத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
பொதுச்சுடரினை பூநகரி முகாம் தவளைப்பாய்ச்சலில் வீரகாவியமான கப்டன் திலகன் அவர்களின் சகோதரி ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை 1990 இல் பலாலிப் பகுதியில் நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்ந வீரவேங்கை. வெற்றி அவர்களின் சகோதரியும் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பூப்பாந்தப்போட்டியில்
தமிழர் விளையாட்டுக்கழகம் 93
தமிழர் விளையாட்டுக்கழகம் 94
நல்லூர்ஸ்தான் வி.கழகம்
யாழ்டன் வி.கழகம்
அரியாலை வி.கழகம்
வட்டுக்கோட்டை வி.கழகம்
Fc Neuf toros கழகங்கள் பங்கு பற்றி சிறப்பித்தன.
அனைத்துக் கழகங்களிலுமிருந்து 150 வரையிலான வீர வீராங்கனைகள் பங்குபற்றினர். போட்டிகளில் நடுவர்களாக இளம்தலைமுறையினர் கடைமையாற்றி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டனர். நடைபெற்ற போட்டிகள் யாவும் சிறப்பாக நடைபெற்று இரவு 20.00 மணிக்கு நிறைவு பெற்றது.
போட்டி முடிவுகள் வருமாறு:-

ஆண்கள் இரட்டையர் 19 வயதிற்கு உட்பட்டோர்
1 ஆம் இடம்: மதுமிதன், லதிசன் (யாழ்டன் வி.க.)
2 ஆம் இடம்: நிறைக்கன், ரோமான் (யாழ்டன் வி;.க.)
3 ஆம் இடம்: தினேஸ், மகீபன் (அரியாலை வி.க.)
ஆண்கள் இரட்டையர் 19 வயதிற்கு மேற்பட்டோர்
1 ஆம் இடம்: விஜயரட்ணம், ஆகாஸ் (நல்லூர்ஸ்தான் வி.க.)
2 ஆம் இடம்: நிசாந்தன், வைஸ்ணவன் (தமிழர் வி;.க. 93)
3 ஆம் இடம்: மோகன், கோணேஸ்வரன் (தமிழர் வி.க. 93)
பெண்கள் இரட்டையர் 19 வயதிற்கு உட்பட்டோர்
1 ஆம் இடம்: லதுமிதா, ஜெனிசா (தமிழர் வி.க. 93)
2 ஆம் இடம்: தரணி, ஜெனிசா (யாழ்டன் வி;.க.)
3 ஆம் இடம்: விபிசனா, யசிக்கா (நல்லூர்ஸ்தான் வி.க.)
பெண்கள் இரட்டையர் 19 வயதிற்கு மேற்பட்டோர்
1 ஆம் இடம்: ச. அனுசியா, த.கோபிகா (எப்சி 93 வி.க.)
2 ஆம் இடம்: கி.துலக்சனா, ச.இயல்வாணி (தமிழர் வி.க. 93)
3 ஆம் இடம்: ம.லிசா, சமித்தா (நல்லூர்ஸ்தான்)
பெண்கள் ஒற்ரையர் 15 வயதிற்கு உட்பட்டோர்
1 ஆம் இடம்: துரைசிங்கம் லதுமிதா (தமிழர் வி.க.93)
2 ஆம் இடம்: பாஸ்கரன் திருசிகா ( அரியாலை வி.க.)
3 ஆம் இடம்: மோகனராஜன் அபித்தா (யாழ்டன் வி.க. 93)
பெண்கள் ஒற்ரையர் 19 வயதிற்கு உட்பட்டோர்
1 ஆம் இடம்: கிறேசியன் டோமினிக் ஜெனிசா (தமிழர் வி.க.93)
2 ஆம் இடம்: சத்தியமூர்த்தி சுபா ( யாழ்டன் வி.க.)
3 ஆம் இடம்: நகுலேஸ்வரன் லக்சிகா (யாழ்டன் வி.க.)
பெண்கள் ஒற்ரையர் 19 வயதிற்கு மேற்பட்டோர்
1 ஆம் இடம்: கிருஸ்ணபிள்ளை துலக்சனா (தமிழர் வி.க.93)
2 ஆம் இடம்: ஸ்ரீபரன் தேனுகா ( யாழ்டன் வி.க.)
3 ஆம் இடம்: சிவபாதலிங்கம் சமிதா (நல்லூர்ஸ்தான் வி.க.)
ஆண்கள் ஒற்ரையர் 15 வயதிற்கு உட்பட்டோர்
1 ஆம் இடம்: ரவிக்குமார் அருஷ் (நல்லூர்ஸ்தான் வி.க.)
2 ஆம் இடம்: நிசாகரன் கோபிசன் ( தமிழர் வி.க. 93)
3 ஆம் இடம்: பானுகோபன் கெலன்குமார் (தமிழர் வி.க. 93)
ஆண்கள் ஒற்ரையர் 19 வயதிற்கு உட்பட்டோர்
1 ஆம் இடம்: இலட்சுமணதாஸ் லதீசன் (யாழ்டன் வி.க.)
2 ஆம் இடம்: தனராஜா மதுமிதன் (யாழ்டன் வி.க.)
3 ஆம் இடம்: ரவீந்திரன் றொமாஜெராட் (யாழ்டன் வி.க.)
ஆண்கள் ஒற்ரையர் 19 வயதிற்கு மேற்பட்டோர்
1 ஆம் இடம்: ஆகாஸ் (நல்லூர்ஸ்தான் வி.க.)
2 ஆம் இடம்: வைஸ்ணவன் ( தமிழர் வி.க. 93)
3 ஆம் இடம்: த.நிசாந்தன் (தமிழர் வி.க. 93)


No comments