சுகவீன விடுமுறையால் முடங்கிய கல்வி

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்களும் பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இடைக்கால கொடுப்பனவைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (26) ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக முடங்கியுள்ளன. இன்று காலை முதல் பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துவந்த பெற்றோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துவந்து விட்டுச்சென்ற பெற்றோர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் மீண்டும் பிள்ளைகளை அழைத்துச்சென்றனர்.

பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தபோதிலும் ஆசிரியர்களின் வரவின்மையினால் பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

No comments