நேர்முகத் தேர்விலும் இராணுவம்?

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று (26) காலை முதல் இடம்பெற்று வருகின்றன.

இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர்.

இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (26) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், வவுனியாவில் அரச உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு இராணுவ வீரர்களும் குறித்த நேர்முகத் தேர்வினை நடத்தி வருகின்றனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், இன்று ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முகத் தேர்வுகள் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments