பிள்ளையான் தொடர்ந்தும் மறியலில்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு, இன்று (25) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மார்ச் 17ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

No comments