ஆவா குழுவினரே விடுவிக்கப்பட்டனர்?


மருதனார் மடத்தில் கைதாகி விடுதலையானவர்கள் அனைவரும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்பது அம்பலமாகியுள்ளது.iதானவர்களை விடுவிக்க அரச அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் என பலரும் பலத்த பிரயத்தனத்தை மேற்கொண்டே விடுவித்ததும் அம்பலமாகியுள்ளது.ஆவா குழு தலைவரான பிரசாத் என்பவரது பிறந்த தினத்தின் போதே அனைவரையும் இராணுவம் முற்றுகையிட்டு கைது செய்துள்ளது.

ஆயினும் அங்கயனின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எதிர்கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்ட சதியால்தான், இராணுவத்தினர் எமது பிரதேசத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களைக் கைது செய்தனர்” என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மருதனார் மடத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து, இராணுவத்தால் 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்தே விடுதியின் உரிமையாளரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருமான த.துவாரகன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தினர். அதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு  “உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக வேறு ஒரு விடுதியில் நேற்று (24) மாலை கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர்.

அவர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அங்கு இராணுவத்தினர் வந்தனர். சிறிது நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் அங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

பின்னர், விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன். சி.சி.ரி.வி. பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன்.

ஆனால், இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்ததும், வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே உள்ளனர் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அதனால், அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால், திட்டமிட்ட வகையில் பொய்யான குற்றச்சட்டுக்களைச் சுமத்தி கைது இடம்பெற்றுள்ளது.

பின்னர், கைது செய்யப்பட்ட இளைஞர்கள்அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் எமது கட்சியின் தலைவர் அங்கஜன் இராமநாதனின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் “சப்ரிகம” நிறைவான கிராமம் எனும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை எதிர்கொள்ள முடியாத தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் செய்த சதி வேலையாகவே நாம் பார்க்கின்றோம்” என்றார்.

No comments