டெனீஸ் எடுத்துச்சென்ற ஜபோன்!


வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் எடுத்துச்சென்றிருந்த ஜபோனிற்கான கட்டணத்தை அவரது அமைச்சு பிடித்துக்கொண்டுள்ளது.

டெனீஸ்வரன் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்ட போது தனது வசமிருந்த கைத் தொலைபேசி மற்றுமோர் மடிக் கணனி என்பனவற்றை கொண்டே சென்றிருந்தார். இவற்றினை கையளிக்காத காரணத்தினால் அதற்கான பணம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 950 ரூபா கழிக்கப்பட்டு இறுதி தொகையான 5 லட்சத்து 23 ஆயிரத்து 847 ரூபா 27 சதம் சம்பளம் வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் இருந்த அமைச்சர்களில் டெனீஸ்வரனை நீக்கியமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது என 2019 யூலை மாதம் இடைக்கால கட்டளையிடப்பட்டது.

இவ்வாறு கட்டளையிடப்பட்ட நிலையில் தனது ஊதியத்தை வழங்குமாறு டெனீஸ்வரன் விண்ணப்பித்தார் . இவ்வாறு விண்ணப்பித்த விடயம் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து சபை முடிவடைந்த காலம் வரைக்கும் உரிய கொடுப்பனவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

No comments