வவுனியா தினப்புயலிற்கு சோதனையாம்?

தலைப்பைச் சேருங்கள்

வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தினப்புயல் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் (ரிஐடி) வாக்குமூலம் அளிக்க வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 2ம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நிறுவனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எனது பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் என்ற வகையில் எனக்கும், ஆசிரியராக கடமையாற்றும் க.சசிதரனுக்கு எதிர்வரும் 3ஆம் திகதியும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments