அமெரிக்க ஒப்பந்தத்தை தூக்கி வீசியது அமைச்சரவை

நாடாளுமன்ற அனுமதியின்றி அமெரிக்கவின் எம்சிசி எனப்படும் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில்லை என்று நேற்று (27) இரவு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என இன்று (28) சற்றுமுன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும், குறித்த ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டதல்ல என்பதையும் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments