முல்லையின் புதிய அரச அதிபர் இவரா?

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான விமலநாதனை நியமிக்க அமைச்சரவை நேற்று (27) தீர்மானித்துள்ளது.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையாற்றுகிறார்.

இதேவேளை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி கனகேஸ்வரன் தற்போது முல்லைத்தீவு மாவட்ட பதில் அரச அதிபராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments