மன்னார் பிரதான வீதி காபற்றாகிறது

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியை காபற் வீதியாக அமைக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் குறித்த வீதி அபிவிருத்தி பணியை இன்று (13) காலை ஆரம்பித்து வைத்தார்.

வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மன்னார் நகரத்தில் இருந்து தலைமன்னார் வரை சுமார் 26.8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி காபற் வீதியாக அமைக்கப்படவுள்ளது.

No comments