பிள்ளையாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.

செங்கலடி எல்லை வீதியில் உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இந்த வழிப்பிள்ளையார் கோயில் அமைக்கப்படிருந்தது.

இந்நிலையில், இன்று (13) உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் பிள்ளையார் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

நேற்றிறவு 8 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் தாம் இறுதியாக நின்றதாகவும் நள்ளிரவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

No comments