ஈழம் வரும் சைவ தலைவர்கள்?


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் சைவ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களை பார்வையிட சர்வதேச இந்து தலைவர்கள் குழுவொன்று வடக்கு வருகை தரவுள்ளது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரத்திற்கு வருகை தரவுள்ள இக்குழு வன்னியிலுள்ள அனைத்து மாவட்டங்களிற்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் போரால் பாதிக்கப்பட்ட சைவ ஆலயங்களிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வவுனியாவில் ஆலய அறங்காவலர்களை சந்திக்கவுமுள்ளது.

ஏதிர்வரும் 20ம் திகதி வவுனியாவிலுள்ள ஓவியா விடுதியில் நடைபெறவுள்ள சந்திப்பில் டெல்லியிலிருந்து வருகை தரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி ரொறன்டோவிலிருந்து வருகை தரும் உலக சைவ அமைப்பின் தலைவர் அடியார் விபுலானந்தர்,மற்றும் தமிழகம்,உள்ளிட்ட பல நாடுகளிலிருந்த சைவ அமைப்புக்களது பிரமுகர்கள் வருகை தரவுள்ளதாக  சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார். 
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்ட அவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சைவ ஆலயங்களது தற்போதைய நிலை மற்றும் அவற்றினை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்தும் ஆராயப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கான அனைத்து திட்டமிடல்களையும் ஒருங்கிணைப்பு பணிகளையும் சைவபுரவலர் தம்பாபிள்ளை பிறமேந்திரராசா முன்னெடுத்துவருவதாகவும் மறவன்புலோ சச்சிதானந்தன் மேலும் தெரிவித்தார். 

இதன் ஊடாக உலகத்தாருக்கு எம் சுழல் பற்றி தெளிவுபடுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஈழம் சிவசேனை பிரமுகரான  தம்பாபிள்ளை பிறமேந்திரராசாவும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments