இராணுவ வீரருக்கு 10 வருட சிறை!

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உறுப்பினருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (18) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், முன்னாள் இராணுவ உறுப்பினருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதி திருகோணமலை மூதூர், பாரதிபுரம் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments