சாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்?


வடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு இலட்சம் சம்பளம் பெறுகின்றார். இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனது சொத்து வெளிப்படுத்துகையிலே எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

இன்னொருபுறம் ஈழம் சிவசேனை தொண்டர்களது எதிர்ப்பினால் தமது மத மாற்ற முயற்சி பின்னடைவை சந்தித்திருப்பதாக எம்.ஏ.சுமந்திரனே தான் துணை தலைவராக உள்ள மெதடிஸ்த திருசசபையின் கடந்த ஆண்டைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளே மதமாற்றத்தை முன்னெடுத்தால் இலங்கையில் எவ்வாறு சைவத்தமிழர்களை பாதுகாக்க முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார் ஈழம் சிவசேனையின் தலைவர் மறவன்புலோ க.சச்சிதானந்தன்.

வடக்கில் மதமாற்ற சட்டத்தை அமுல்படுத்த முடியாதாவென்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அது சாத்தியமற்றிருக்கின்றமைக்கு தமிழ் தலைமைகளே காரணமெனவும் தெரிவித்தார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் ஒருபுறம் பௌத்தர்கள் இன்னொரு புறம் இஸ்லாமியர்கள் என ஈழச்சைவர்கள் முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ஈழ சைவர்களை காப்பாற்ற சர்வதேச சைவத்தலைவர்களே கைகொடுக்கவேண்டியுள்ளது.

வரலாற்று ரீதியாக பௌத்தர்கள் தமிழ் மக்களிற்கு துரோகம் இழைத்தே வருகின்றனர்.இன்னொருபுறம் கத்தோலிக்கர்கள்,மற்றொரு புறம் முஸ்லீம்கள் என நெருக்கடிகள் தொடர்கின்றன.

பௌத்த விகாரைகளை கட்டி வழங்க இலங்கை அரசு தயாராக இருக்கின்றது.கத்தோலிக்கர்களிற்கு மேற்குலக நாடுகளும் முஸ்லீம்களிற்கு அரேபிய நாடுகளும் உதவுகின்றன.

ஆனால் யுத்த அழிவுகளுடன் இருக்கின்ற எம்மை எவரும் திரும்பிக்கூட பார்க்க தயாராக இல்லையெனவும் அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார். 

No comments