கத்தார் பயணமாகிறார் தற்பரன்!


சிறுவர் துஸ்பிரயோகம்  மற்றும் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கப்படுத்தல் தொடர்பான சர்வதேச சமூகத்தின் ஏற்பாட்டில் கத்தார் நாட்டின் தலைநகர் டோஹாவில் இடம்பெறும் சர்வதேச மாநாட்டில்  சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன்; வளவாளராக பங்கு பற்றும் பொருட்டு அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தினைக் கொண்ட அதன் சர்வதேச சமூகத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

மாசி மாதம் 14-17ஆந் திகதிகளில் இடம்பெறும் இலங்கை மற்றும் 72 நாடுகளில் இருந்து 2450 பேர் வரையில் பங்குகொள்ளவுள்ளனர்.  இம்மாநாட்டில் போருக்கு பின்னரான சிறுவர் வாழ்வு முறைமையில் பங்காண்மையின் முக்கியத்துவம் மற்றும் நியமங்களுடன் கூடிய தராதரங்கள் சம்பவ முகாமைத்துவத்தில் எங்ஙனம் பின்பற்றப்படலாம் என்கின்ற இரு விடயப்பரப்புக்களில் தனது கருத்துக்களினைப் பகிர்ந்து  கொள்ளவுள்ளார்.

தற்பரன்  யாழ் இந்துக்கல்லூரி , புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரியின் முன்னைய மாணவரும், சிரேஸ்ட  சட்டத்தரணி மற்றும் சட்ட முதுமாணியுமாவார்.  சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இருபது வருட கால தொடர்ச்சியான அனுபவத்தினைக் கொண்டிருப்பவர். ஐக்கிய நாடுகள் உட்பட்ட பல்வேறு களங்களில் இவர் தனது ஆராய்ச்சி கட்டுரைகளினை கடந்த காலங்களில் சமர்பித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.


No comments