ஈரானின் செயற்கைக்கோள் தாங்கிய ஏவுகணை முயற்சி தோல்வி

ஈரான் செயற்கைக்கோளைத் தாங்கியவாறு புதிய பாலஸ்டிக் ஏவுகணை ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏவியுள்ளது. எனினும் குறித்த ஏவுகணை
செயற்கைக்கோளுக்கான சுற்றுப்பாதையை அடையாத காரணத்தால் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கில் 230 கி.மீ (145 மைல்) தொலைவில் உள்ள ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள இமாம் கோமெய்னி விண்வெளியில் உள்ளூர் நேரப்படி இரவு 7:15 மணிக்கு இந்த செயற்கைக்கோளை ஏவப்பட்டது.

உந்துகணையின் குறைந்த வேகத்தின் காரணமாக ஜாமர் 1 தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்க முடியவில்லை என்று மாநில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது

No comments